Thursday 1 October 2015

சிறந்த பல்கலைக்கழகங்கள்

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 2 இந்திய கல்வி நிறுவனங்கள்





பிரிட்டனின் பிரபல ரேங்கிக் ஏஜென்ஸியான டைம்ஸ் ஹையர் எஜூகேஷன் உலகின் 
சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெங்களூருவில் 
உள்ள ஐ.ஐ.எஸ்.சி (251-300) மற்றும் ஐ.ஐ.டி மும்பை (351-400) ஆகிய 2 இந்திய 
கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளது. எனினும், இது கடந்த ஆண்டை
விட பின்தங்கி உள்ளதாகவே கருதப்படுகிறது.
உலகின் தலைசிறந்த 800 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 17 இந்திய பல்கலைக்
கழகங்கள் இடம் பிடித்துள்ளது என்றாலும், சீனா போன்ற வலுவான நாடுகளுடன் 
போட்டி போடுவதற்கு இந்திய கல்வி நிறுவனங்கள் இன்னும் நிறைய முயற்சிக்க 
மேற்கொள்ள வேண்டும் என டைம்ஸ் தரவரிசை நிறுவனத்தின் ஆசிரியர் 
பில் பட்டி கூறியுள்ளார்.
டைம்ஸ் தரவரிசையின்படி உலக அளவில் இந்த ஆண்டிற்கான டாப்-10 
பல்கலைக்கழங்களின் விவரம்:
1. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
2. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
3. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்
4. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
5. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
6. ஹார்வர்டு பல்கலைக்கழகம்
7. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
8. இம்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டன்
9. சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
10.சிகாகோ பல்கலைக்கழகம்

இந்தியாவின் டாப்-10 கல்வி நிறுவனங்களின் விவரம்:
215-300 இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்
351-400 ஐ.ஐ.டி மும்பை
401-500 ஐ.ஐ.டி தில்லி
401-500 ஐ.ஐ.டி கரக்பூர்
401-500 ஐ.ஐ.டி சென்னை
501-600 ஐ.ஐ.டி கெளவுகாத்தி
501-600 ஐ.ஐ.டி கான்பூர்
501-600 ஐ.ஐ.டி ரூர்க்
501-600 ஜதவ்பூர் பல்கலைக்கழகம்
501-600 பஞ்சாப் பல்கலைக்கழகம்