Sunday 11 October 2015

சிறப்பு பயிற்சி

குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

அரசு பள்ளிகளில், காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறையும், பிளஸ் 2 மற்றும் 
10ம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.





நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும்; கடந்த ஆண்டை விட அதிகமாக, அரசு பள்ளி மாணவர்கள் மாநில, 'ரேங்க்'கை எட்டவும், பள்ளி கல்வித் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய கேள்விகள் மற்றும் 
பதில்கள் அடங்கிய புத்தகம், அதிக மதிப்பெண்கள் தரும் கேள்வி - பதில்கள் 
அடங்கிய பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. மாலை நேர வகுப்பு மற்றும் விடுமுறை கால வகுப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், மூன்று மாதங்களில் நடத்திய பருவத்தேர்வு மற்றும் சமீபத்தில் 
முடிந்த காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை ஒப்பிட்டு, பின் தங்கிய மாணவர்களை அடையாளம் காண, ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும், பின்தங்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கூடுதல் பயிற்சிகள் தரவும், பெற்றோரை அழைத்து கலந்தாய்வு நடத்தி, தங்கள் பிள்ளைகளுக்கு கூடுதல் பயிற்சி தரும்படி அறிவுறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.