Friday 6 November 2015

கலாம் குறித்த 3D

கலாம் குறித்த 3D காட்சியகம் மத்திய அரசு பரிசீலனை


தமிழகத்தின், ராமேஸ்வரம் நகரில் அமையவிருக்கும் கலாம் நினைவகத்தில், அவர் இந்திய அரசுக்கு ஆட்சிய தொண்டுகள் குறித்த முப்பரிமாண (3 Dimension) காட்சியகம் அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
மறைந்த முன்னாள் குடியரசுத்  தலைவரும், ஏவுகணை நாயகன் என்ற அழைக்கப்பட்ட விஞ்ஞானியும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான அப்துல் கலாம் நினைவாக, அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் ஒரு நினைவகம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார்.
அந்த நினைவகத்தை எவ்வாறு நிர்மாணிப்பது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேர்தல் ஆணைய முன்னாள் ஆணையர் என். கோபாலகிருஷ்ணன், கலாச்சாரத் துறை செயலர் நரேந்திரகுமார் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ராமேஸ்வரம் நகரில் அமையவிருக்கும் கலாம் நினைவகத்தில், அவர் இந்திய அரசுக்கு ஆட்சிய தொண்டுகள் குறித்த முப்பரிமாண (3 Dimension) காட்சியகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எனினும் எவ்வித இறுதி முடிவும் மேற்கொள்ளப்படவில்லை.
ராமேஸ்வரத்தில் அமையவிருக்கும் கலாம் நினைவகத்தில் நூலகம், அருங்காட்சியகம் மற்றும் தியானக் கூடம் ஆகியவை இடம்பெறும்.
மேலும், அங்கு அக்னி ஏவுகணை மாதிரியும், பாரம்பரிய இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் அரங்குகளும், கலாமின் படைப்புகளும் இடம் பெறும் என தெரிகிறது.