Thursday 28 January 2016

Gm.....If u solve this, U R gr8!

Put Any Mathematic signs:

2 2 2=6

3 3 3=6

4 4 4=6

5 5 5=6

6 6 6=6

7 7 7=6

8 8 8=6

9 9 9=6

Max 1 hour time…..
anybody can solve

Answers:

2+2+2=6
3×3-3=6
√4+√4+√4=6
5+(5÷5)=6
6×(6÷6)=6
7-(7÷7)=6
3√8+3√8+3√8=6
√9×√9-√9=6
நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்

1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

7வது இடம்

2 )  இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

23 வது இடம்

3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

16வது இடம்

4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

15வது இடம்

5 ) இந்தியாவின்
 கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

 14வது இடம்

6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?

மதுரை

7 )  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

 2004

 8 )  தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?

 72993

9 )  தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?

 சென்னை

10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

 1076 கி.மீ

11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது

 1986

12 )  தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?

 கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)

 13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?

சென்னை (23,23,454)

 14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?

சென்னை (46,81,087)

 15 )  தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

 68.45 ஆண்டுகள்

16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?

13 மாவட்டங்கள்

17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

 234

 18 )  தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?

 1

 19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?

 12 துறைமுகங்கள்
 தமிழகத்தில் உள்ளன

20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?

 சென்னை

21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

 71.54 ஆண்டுகள்

22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

 15979

23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

 561

 24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

 146

25 )  தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

 18

 26 )  தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

 39

27 )  தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?

தர்மபுரி (64.71 சதவீதம்)

 28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?

பெரம்பலூர் 5,64,511

 29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?

சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)

30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?

நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)

 31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?

 3,74,901

 32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?

 32

33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?

அரியலூர்

34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?

திருப்பூர்

 35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்

80.33 சதவீதம்

36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?

17.58 சதவீதம்

37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?

 வரையாடு

38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?

 சென்னை, எண்ணூர், தூத்துக்குடி

39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?

காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி

40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2.  கோவை
3. மதுரை
4. திருச்சி  
5 தூத்துக்குடி
6 சேலம்

41 )  தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?

 999பெண்கள்(1000 ஆண்கள்)

42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?

1. நீலகிரி        
2. சேலம்        
3. வேலூர்        
4. கன்னியாக்குமாரி

43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?

1. திருவாரூர்    
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி    
4. கடலூர்

44 )  தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?

மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)

 45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?

www.tn.gov.in

46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

 சென்னை

47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?

ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்

48 )  தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?

 திருவில்லிபுத்தூர் கோபுரம்

49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?

 கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்

50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?

 நீராடும் கடலுடுத்த

51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?

பரத நாட்டியம்

52 )  தமிழ்நாட்டின் மாநில பறவை எது?

மரகதப்புறா

53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

பனைமரம்

54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

செங்காந்தர் மலா்

55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

 கபடி

56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?

 1,30,058 ச.கி.மீ

57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?

7,21,38,958              
ஆண் 36158871      
பெண் 35980087

Wednesday 27 January 2016

NEW 7 WONDERS OF THE WORLD-2015

Christ Redeemer: Rio de Janeiro, Brazil
Christ Redeemer: Rio de Janeiro, Brazil
Great Wall of China: China
Great Wall of China: China
Machu Picchu: Peru
Machu Picchu: Peru
Petra: Jordan
Petra: Jordan
Pyramid at Chichén Itzá: Yucatan Peninsula, Mexico
Pyramid at Chichén Itzá: Yucatan Peninsula, Mexico
Roman Colosseum: Rome, Italy
Roman Colosseum: Rome, Italy
Taj Mahal: Agra, India
Taj Mahal: Agra, India

How to score 100/100 marks in Maths

Mathematics can be a nightmare to some students whereas fun for some others. It is basically because of the same reason. You either get it completely right or entirely wrong. It’s not like a language subject wherein there can be a maybe. And that is also the reason that it is definitely possible to score 100/100 marks in maths.
How can you score 100/100 marks in maths:
People say that only the students with a rational bent of mind understand mathematics. But it is not so. Mathematics is subject which helps in developing a rational thinking and a logical approach in students. A student cannot be made to fall in love with mathematics overnight but following are some tips to improve your score in maths and even help you achieve full marks in maths.
During Exam Preparations:
  • Make a separate register for theorems, formulae and methodologies: Maths is all about theorems, concepts and formulae, and it’s always wise to keep them handy. You can read and brush them up even when you are on the move and this practice also comes to rescue when you are having a last minute revision.
  • Solve Problems yourself: Whereas it is good to go through and understand different types of problems, it is very important to solve them yourself. Knowing theories and concept is necessary but to learn their application is inescapable if you want to score full marks in maths. You have to solve each by yourself, minimum 3-4 times over the course of time.
  • Understand your syllabus: Understanding your portions and the weightage attached to different sections helps you in deciding how much time to dedicate to each section. For example, if you know that there will be just a 5 marks question from a particular section, you do not have to dedicate a week practicing those sums.
    • Practice PapersPractice papers are a good way to mentally prepare yourself for what you are going to get in the exams. The more you solve these, more confidence you will gain towards your achievement of scoring the highest score. Also, it is important to understand that you need not wait for your syllabus to finish before you start solving these. As you go on finishing different sections, you can find the respective questions from the sample papers and solve them side by side.
      • Address your problem areas outright: There may be times when you are solving a sample paper and you come across some questions which you cannot solve. While it is convenient to keep them aside to clear later, but over a period of time these accumulate and become a burden for you.
      • Time Management: It is not easy to be a maths champion. You must take out some time every day to solve mathematical problems in order to score 100/100 marks in maths, even when you have dedicated a particular day to some other subject. This can range from a quick half an hour of going through your register of formulae and methodologies, or dedicating couple of hours to solve sample papers.
      During Examination:
      • Clean Paper and margin: The cleaner, the better. You should keep in mind that the examiner needs to understand each and every step how you have arrived at an answer and unfortunately he does not have much time to dedicate on a single problem. Keep your paper free from cutting and overwriting, and draw clean margins to do the rough work. A clean paper also reflects an uncluttered mind.
      • Marks are in the steps: whenever you go through a solution and understand its rationale, pay special focus on how the different steps progress. You cannot cram answers and achieve full marks in maths, so just paying heed to the figures in the examples is a waste of your time. Instead you must learn the various steps involved. Remember that even if you attempt and write some steps, you will definitely secure some marks for each step, irrespective of whether your answer is correct or incorrect.
      • Figures and Graphs: Figures and graphs can fetch you easy marks if made with a little concentration. For this, keep a ruler which has sharp and smooth side and a pencil which is well sharpened. These, if you have practised well, constitute the simplest parts of the exam and you can aim to finish this as soon as you get your paper.
      • Finish familiar questions first: Read the question paper thoroughly before you start solving the questions. While it is natural to be stuck on the questions which you find unfamiliar but you must remember that you have to finish your examination in a stipulated time. In order to achieve 100/100 marks in maths, you much strategize to first finish the questions you know and then move on to the unfamiliar questions.
      • Revise, revise, and revise: Once you are through with writing the paper, take a deep breath and revise it thoroughly. In the first revision check whether you have attempted all questions or not. This is important because you might not have solved the questions in a given order. In the second revision check the steps and the rest. If time still remains, go through the sheet once again!
      To achieve 100/100 marks in maths, make it a fun experience. Understand the basic concept first and then try solving as many problems as possible. Remember that there are no shortcuts in maths!

Sunday 17 January 2016


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கான உளவியல் ஆலோசனை பயிற்சி 12 மற்றும் 13.01.2016 ஆகிய இருநாட்களும் அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள அண்ணாமலை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

பயிற்சியினை கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.ர.பாலமுரளி அவர்கள் துவக்கி வைத்தார். பயிற்சிக்கு வடலூர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் டாக்டர்.திரு.சி.செல்வராசு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

பயிற்சியில் உளவியல் நிபுணர் டாக்டர்.திரு.செந்தில்நாதன் அவர்களும், மாநில ஆசிரியர் கல்வியியல் பயிற்சி இயக்கத்தின் பேராசிரியர் திரு.சக்தி அவர்களும் கலந்து கொண்டுஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்கள். 

உளவியல் ஆலோசனை பயிற்சி குறித்த தங்களுடைய கருத்துகளை ஜெயா தொலைக்காட்சி நேரலையில் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியர் திருமதி.பிரேமலதா அவர்களும், எடச்சித்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு.அக்பர் அவர்களும், இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் திருமதி.உமா அவர்களும் பகிர்ந்து கொண்டார்கள்.















கடலூர் மாவட்டம் ஸ்ரீநெடுஞ்சேரி ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர் டாக்டர்.திரு.ஜெகன் அவர்களின் மருத்துவ  குழுவினர் ஸ்ரீமுஷ்ணம் பகுதி குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு முகாம் நடத்தி, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய காட்சி



விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழா நிகழ்வில் கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.ர.பாலமுரளி அவர்கள் விருத்தாசலம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு.பிரகாசம் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

எடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூபாய்.1.70 கோடி செலவில் கட்டப்படவுள்ள அனைவருக்கும் கல்வி இயக்க கட்டிடம் சார்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் திரு.செந்தில்குமார் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து  பொன்னாடை அணிவித்த எம் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.நஸ்ரின்னிஷா பேகம் அவர்கள்!


வண்ணான்குடிகாடு பள்ளியில் கொண்டாடப்பட்ட 
சமத்துவ பொங்கல் விழா

Saturday 16 January 2016

பொங்கல் பண்டிகையின் வரலாறு மற்றும் விதிமுறைகள் -

 படையல் பூஜை செய்திட உகந்த நல்ல நேரம்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த நன்னாளிலே
 சுப ஓரைகளில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தால், அஷ்ட 
லஷ்மிகளும் நம் வீட்டில் வாசம் செய்யும், நம்மை காக்கும்.
 மன்மத வருடம், தை மாதம் முதல் நாள் 15.1.2016 வெள்ளி
 அன்று பொங்கல் பானை வைத்து பொங்கல் பொங்கவும், 
சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நல்ல 
நேரம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை 
பொங்கல் வைத்து வழிபடலாம். 



சூரிய பகவானுக்கு உகந்த நண்பகல் 12.00 – 01.00 PM சூரிய 
ஓரையில் பூஜை செய்தால், தன-தான்யம் பெருகும்.
காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரை சுக்கிர 
ஓரையில் பொங்கல் வைத்தால் தனம், தானியம் 
பெருகும். அதேபோல, மதியம் 01.00 – 02.00 மணி அளவில்
 சுக்கிர ஓரையும், மதியம் 02.00 – 03.00 மணிவரை புதன் 
ஓரையும் சிறந்ததே. சந்திர ஓரையில் பொங்கல், 
வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை 
கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து 
வணங்க வேண்டும். அப்போது 21 வகையான 
சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன்
 மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, 
சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க 
வேண்டும். இதனால் சூரியபகவானின் ஆசி பரிபூரணமாக 
கிட்டும்.

FLASH NEWS:

பிளஸ் 2 செய்முறை தேர்வு: 14 பாடங்களுக்கு அறிவிப்பு

பிளஸ் 2வில், 14 பாடங்களுக்கான செய்முறை தேர்வை, 
பிப்., 5 முதல், 25க்குள் நடத்தி முடிக்க, அரசு
 தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 
மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச், 4ல் 
துவங்குகிறது. அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தேர்வு மையங்கள் அமைத்தல், தேர்வர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்தல், பொதுத் தேர்வு பணிகளுக்கு பயிற்சி வழங்குதல் போன்ற பணிகள் தீவிரம் 
அடைந்துள்ளன.

இந்நிலையில், செய்முறைத் தேர்வை எப்போது நடத்த வேண்டும்
 என, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி, பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நர்சிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி, தொடர்பு ஆங்கிலம் உள்பட, 
14 பாடங்களுக்கு, பிப்., 5 முதல், 25க்குள் செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். தனித்தேர்வர்களுக்கு, பிப்.,23 முதல், 25க்குள், செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளுவர் தினம்: திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படுமா?

உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு தேவையான வழிகளை போதித்தவர் திருவள்ளுவர். 

133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள் வீதம் 1330 குறள்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அறத்துப் பால், பொருட் பால், காமத்துப்பால் என மூன்றாக பிரித்து முக்கனியின் சுவையைப் போல், தமிழர்களுக்கு மட்டுமல்லாது, உலகுக்கே விருந்தளித்துள்ளார் வள்ளுவர். ஆனால் குறளில் எங்குமே தமிழ் என்ற வார்த்தை இடம்பெறாதது இந்த நூலை உலகப் பொதுமறையாக கருதுவதற்கு அருமையான தகுதியாகும்.
திருவள்ளுவர் தினம் வந்தது எப்போது?


திருவள்ளுவர். திருக்குறளை எழுதி தமிழுக்கு பெருமை சேர்த்தவர். அவர் எப்போது பிறந்தார் என்பது குறித்து பல் வேறுபட்ட கருத்துக்கள் நிலவிவருகின்றன. அணுவைத் துளைத்து அதில் ஏழ் கடலைப் புகுத்தி குறுகத்தரித்த குறள் என்ற பெருமை கொண்டது திருக்குறள். 

திருக்குறள் தந்த திருவள்ளுவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 16-ம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

திருவள்ளுவராண்டு எப்போது துவங்கியது, திருவள்ளுவர் எப்போது பிறந்தார் உள்ளிட்ட தகவல்களை தருகிறார் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர்க.சுப்ரமணியம். 

தமிழாண்டு: காலம், மிகவும் இன்றியமையாதது. வள்ளுவர் காலம் அறிதல் என்று ஒரு அதிகாரமே வரைந்துள்ளார். இறந்த காலம், நிகழ் காலம், வருங்காலம்எனப் பொதுவாகக் காலத்தை பிரிப்பர். முக்காலமும் உணர்ந்த ஞானி என்று அழைக்கப் பெறுவது அனைவரும் அறிந்த ஒரு தொடர். 

குடும்பம், ஊர், நகர்உலகம், சமுதாயம் பற்றிய நிகழ்வுகளைக் கணக்கிட காலம் இன்றியமையாத ஒன்று. நமது முன்னோர் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை,ஊழி என வரையறை செய்துள்ளனர். 60 நாழிகை கொண்டது ஒரு நாள். நாளை வைகறை, காலை,நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் எனப் பிரித்தனர். ஆண்டை இளவேனில், முதுவேனில, கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறு பகுதிகாளாகப் பிரித்தனர். 

தொடர் ஆண்டுமுறை நம் நாட்டில் வழக்கத்தில்இல்லை. 60 ஆண்டுகளான பிரபவ முதல் அட்சய வரை இடையில் புகுந்த ஆண்டுகள். இவை தமிழாண்டுகள் இல்லை. 

திருவள்ளுவர் ஆண்டு: பிரபவ ஆண்டு முறையில் தமிழ் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு அழிவும், இழிவும் உண்டானதை எண்ணிப் பார்த்து நுண்ணறிவுடையஅறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிஆராய்ந்தனர். திருவள்ளுவர் இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் எனவும், அவர் பெயரில் தொடராண்டைப் பின்பற்றுவது சாலச் சிறந்தது என்றும்,அதையே தமிழாண்டு எனக் கொள்வது என்றும் முடிவுகட்டினர். இந்த முடிவை அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டு பின்பற்றத் தொடங்கினர். 

மேற்கண்ட முடிவைச் செய்தவர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார். தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாண சுந்தரனார், தமிழ்க் காவலர் சுப்பிரமணிணியப்பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை. நாவலர் நா.மு. வெங்கடசாமி நாட்டார்., நாவலர் சோம சுந்தர பாரதியார். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் ஆவர். 

திருவள்ளுவர் ஆண்டின் முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமை ஏழும் - வழக்கில் உள்ளவை. 

திருவள்ளுவரின் காலம் கி.மு. 31. ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. 2001+ 31 = 2032. இப்பொழுது திருவள்ளுவர் ஆண்டு2032 ஆகும். தைத் திங்களில் தான் உழவர்களின் விளை பொருள் களஞ்சியத்துக்கு வருகிறது. பொருளாதாரத் திட்டம் வகுக்கும் காலம் தை. கிராமத்தினர் - ஊர்ச்சொத்தை குத்தகைக்கு விடும் காலமும் தை திங்களே ஆகும். 

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 முதல் ஏற்று 1972 முதல் அரசிதழிலும் வெளியிட்டு - தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர்ஆண்டு பின்பற்றப் பெற்று வருகின்றது. 

Saturday 9 January 2016

10ம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

அரசு தேர்வுத்துறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான 
செய்முறை தேர்வை அறிவித்துஉள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு
 பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், செய்முறை தேர்வு
 அறிவிப்பை, அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. அதில், 
10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு, ஜன., 22 முதல் 
பிப்., 3க்குள் நடத்தி முடித்து, மதிப்பெண் பட்டியல் 
அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News From: http://www.tnkalvi.com/

தேர்தல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம்: 

சென்னையில் நாளை துவக்கம்

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு, பயிற்சி 
அளிக்க உள்ள பயிற்சியாளர்களுக்கான முகாம், சென்னையில் 
நாளை முதல் மூன்று நாட்களுக்கு, நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை
 பொதுத் தேர்தல், ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே,
 தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை, தேர்தல் கமிஷன் 
மேற்கொண்டுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு 
பயிற்சி அளிப்பதற்காக, மாவட்டத்திற்கு ஆறு 
பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


அவர்களுக்கு கடந்த மாதத்தில் இருந்து, பல்வேறு 
பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.டிச., 30 மற்றும் 31ம் தேதி, 
தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கு சேலத்தில் பயிற்சி 
அளிக்கப்பட்டது. நேற்று சென்னையில், ஆறு மாவட்டங்களைச் 
சேர்ந்த, செய்தி மக்கள் தொடர்பு 
அலுவலர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தலின்போது, 
சமூக வலைதளங்களில், ஓட்டுப்போட வேண்டியதன் அவசியத்தை 
வலியுறுத்தி பிரசாரம் செய்வது, மக்கள் இடையே விழிப்புணர்வு 
ஏற்படுத்துவது குறித்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ள 
இவர்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரிகள், நேரடியாக நடத்தும் 
பயிற்சி வகுப்பு சென்னை மற்றும் பவானிசாகரில், இரண்டு கட்டமாக
 நடைபெற உள்ளது.
சென்னையில், நாளை முதல், 13ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற 
உள்ளது. இதில், 21 மாவட்டங்களில் இருந்து, மாவட்டத்திற்கு, ஆறு 
பயிற்சியாளர்கள் வீதம் கலந்து கொள்ள உள்ளனர்.பவானிசாகரில், 
19ம் தேதி முதல் 22ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 
இதில், 11 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

அகஇ - இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் மற்றும் பொது மக்களிடத்திலும் மற்றும் தனி திறன்களை மேம்படுத்தவும் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட முறையே 100, 150க்கு அதிகமாக உள்ள மாணவர்கள் எண்ணிக்கை PRIMARY பள்ளிகளுக்கு ரூ.5000/-ம், UPPER PRIMARY பள்ளிகளுக்கு ரூ.6000/-ம் ஒதுக்கீடு செய்து இயக்குனர் உத்தரவு






Wednesday 6 January 2016

வேலை வாய்ப்புகள்

1. இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு

Image result for indian railway
மொத்த காலிப்பணி இடங்கள்: 18,252.
பணியிடங்கள்: கமர்சியல் அப்ரண்டீஸ், டிராபிக் அப்ரண்டீஸ், ஜூனியர் அக்கவுன்ட் அசிஸ்டண்ட் மற்றும் டைப்பிஸ்ட், சீனியர் கிளார்க் மற்றும் டைப்பிஸ்ட், உதவி ஸ்டேஷன் மாஸ்டர், போக்குவரத்து உதவியாளர், சீனியர் டைம் கீப்பர் மற்றும் ரிசர்வேஷன் கிளார்க்.
வயது வரம்பு: 18 முதல்  32 வயதுக்கு உட்பட்டவர்கள். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு மற்றும் வயது தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: ‘கணினி வழித் தேர்வு’ அடிப்படையில் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வின்ணப்பிக்கும் முறை: www.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 25

2. மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி

மத்திய அரசின் கீழ் செயல்படும், மனநலம் குன்றியோர்க்கான தேசிய கல்வி நிறுவனத்தில், திறன் அறிவு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகள் இப்பயிற்சிக்கு தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் அனைவருக்கும், இந்திய அரசு விதிப்படி உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 15
மேலும் விவரங்களுக்கு: www.nimhindia.gov.in

3. மத்திய நிறுவனத்தில் வாய்ப்புகள்

Image result for national institute of electronics and communications technology
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: துணை இயக்குனர், உதவி இயக்குனர், நிதி அலுவலர், நிர்வாக அதிகாரி, உதவியாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர், சுருக்கெழுத்தாளர், இளநிலை உதவியாளர், மூத்த மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்.
தகுதி: பணியிடங்களுக்கு ஏற்ப வயது மற்றும் தகுதிகள் மாறுபடும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 14
மேலும் விவரங்களுக்கு: www.nielit.gov.in

4. தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள 375 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் சிவில்)
வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18; அதிகபட்ச வயது 30. எஸ்.சி., எஸ்.சி.(ஏ), எஸ்.டி., எம்.பி.சி.,/ டி.சி., பி.சி.ஒ., பி.சி.எம்., மற்றும் விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
தகுதிகள்: பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும்.
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 11
மேலும் விவரங்களுக்கு: www.tangedco.gov.in

5. வங்கியில் அதிகாரி பணி வாய்ப்பு!

Image result for sidbi
மத்திய அரசின்கீழ் செயல்படும், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியில் (எஸ்.ஐ.டி.பி.ஐ.,) கிரேடு ’ஏ’ பிரிவில் அதிகாரியாக பணிபுரிய ஓர் வாய்ப்பு!  
பணியிடம்: உதவி மேலாளர்
காலிப்பணியிடங்கள்: 100
மாத ஊதியம்: தோரயமாக 36 ஆயிரம் ரூபாய்.
வயது வரம்பு:  21 வயதுக்குக் குறைவாகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். எனினும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.
தகுதிகள்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்பில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 55 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
சி.ஏ., சி.எஸ்., ஐ.சி.டபுள்யூ.ஏ., சி.எப்.ஏ., எம்.பி.ஏ., இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ இன் பேங்கிங் போன்ற, ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினியை கையாலும் திறன் பெற்றிருப்பது நல்லது.
மாற்றுத்திறனாளிகளும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.
தேர்வு முறை
ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்து தேர்வு: ’அப்ஜெக்டிவ்’ அடிப்படையில், கணினி அறிவுத் திறன், ஆங்கில மொழிப் புலமை, பொது அறிவு, ரீசனிங் அப்டிடியூட் மற்றும் குவாண்டிடேடிவ் அப்டிடியூட். ‘டிஸ்கிரிப்டிவ்’ அடிப்படையில் ஆங்கில மொழி மற்றும் வரைவு திறன் (டிராப்டிங் ஏபிலிட்டி).
இலவச பயிற்சி
விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கு எளிதில் தயாராவதற்காக, இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் சார்பில், 14 மையங்களில் 8 நாட்கள் ‘பிரி-ரெக்ருட்மென்ட்  டிரைனிங்’ எனும் இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகிறது.
பயிற்சி மையங்கள்: அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, கோவை, கவுகாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை/தானே/நவி மும்பை,  புதுதில்லி மற்றும் புனே.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 11
மேலும் விவரங்களுக்கு: www.sidbi.in