Wednesday 6 January 2016

வேலை வாய்ப்புகள்

1. இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு

Image result for indian railway
மொத்த காலிப்பணி இடங்கள்: 18,252.
பணியிடங்கள்: கமர்சியல் அப்ரண்டீஸ், டிராபிக் அப்ரண்டீஸ், ஜூனியர் அக்கவுன்ட் அசிஸ்டண்ட் மற்றும் டைப்பிஸ்ட், சீனியர் கிளார்க் மற்றும் டைப்பிஸ்ட், உதவி ஸ்டேஷன் மாஸ்டர், போக்குவரத்து உதவியாளர், சீனியர் டைம் கீப்பர் மற்றும் ரிசர்வேஷன் கிளார்க்.
வயது வரம்பு: 18 முதல்  32 வயதுக்கு உட்பட்டவர்கள். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு மற்றும் வயது தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: ‘கணினி வழித் தேர்வு’ அடிப்படையில் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வின்ணப்பிக்கும் முறை: www.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 25

2. மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி

மத்திய அரசின் கீழ் செயல்படும், மனநலம் குன்றியோர்க்கான தேசிய கல்வி நிறுவனத்தில், திறன் அறிவு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகள் இப்பயிற்சிக்கு தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் அனைவருக்கும், இந்திய அரசு விதிப்படி உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 15
மேலும் விவரங்களுக்கு: www.nimhindia.gov.in

3. மத்திய நிறுவனத்தில் வாய்ப்புகள்

Image result for national institute of electronics and communications technology
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: துணை இயக்குனர், உதவி இயக்குனர், நிதி அலுவலர், நிர்வாக அதிகாரி, உதவியாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர், சுருக்கெழுத்தாளர், இளநிலை உதவியாளர், மூத்த மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்.
தகுதி: பணியிடங்களுக்கு ஏற்ப வயது மற்றும் தகுதிகள் மாறுபடும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 14
மேலும் விவரங்களுக்கு: www.nielit.gov.in

4. தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள 375 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் சிவில்)
வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18; அதிகபட்ச வயது 30. எஸ்.சி., எஸ்.சி.(ஏ), எஸ்.டி., எம்.பி.சி.,/ டி.சி., பி.சி.ஒ., பி.சி.எம்., மற்றும் விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
தகுதிகள்: பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும்.
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 11
மேலும் விவரங்களுக்கு: www.tangedco.gov.in

5. வங்கியில் அதிகாரி பணி வாய்ப்பு!

Image result for sidbi
மத்திய அரசின்கீழ் செயல்படும், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியில் (எஸ்.ஐ.டி.பி.ஐ.,) கிரேடு ’ஏ’ பிரிவில் அதிகாரியாக பணிபுரிய ஓர் வாய்ப்பு!  
பணியிடம்: உதவி மேலாளர்
காலிப்பணியிடங்கள்: 100
மாத ஊதியம்: தோரயமாக 36 ஆயிரம் ரூபாய்.
வயது வரம்பு:  21 வயதுக்குக் குறைவாகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். எனினும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.
தகுதிகள்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்பில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 55 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
சி.ஏ., சி.எஸ்., ஐ.சி.டபுள்யூ.ஏ., சி.எப்.ஏ., எம்.பி.ஏ., இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ இன் பேங்கிங் போன்ற, ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினியை கையாலும் திறன் பெற்றிருப்பது நல்லது.
மாற்றுத்திறனாளிகளும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.
தேர்வு முறை
ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்து தேர்வு: ’அப்ஜெக்டிவ்’ அடிப்படையில், கணினி அறிவுத் திறன், ஆங்கில மொழிப் புலமை, பொது அறிவு, ரீசனிங் அப்டிடியூட் மற்றும் குவாண்டிடேடிவ் அப்டிடியூட். ‘டிஸ்கிரிப்டிவ்’ அடிப்படையில் ஆங்கில மொழி மற்றும் வரைவு திறன் (டிராப்டிங் ஏபிலிட்டி).
இலவச பயிற்சி
விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கு எளிதில் தயாராவதற்காக, இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் சார்பில், 14 மையங்களில் 8 நாட்கள் ‘பிரி-ரெக்ருட்மென்ட்  டிரைனிங்’ எனும் இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகிறது.
பயிற்சி மையங்கள்: அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, கோவை, கவுகாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை/தானே/நவி மும்பை,  புதுதில்லி மற்றும் புனே.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 11
மேலும் விவரங்களுக்கு: www.sidbi.in