Sunday 29 May 2016

மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறையின் கீழ், எஸ்.சி., -- எஸ்.டி., பிரிவினருக்கான வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், ஆண்டுதோறும் இலவச பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பயிற்சி, ஜூலை, 1ல்துவங்குகிறது.

11 மாதம் நடக்கும் பயிற்சி முகாமில், ஆங்கிலம், பொது அறிவு, அடிப்படை கணினி பயிற்சி, சுருக்கெழுத்து, தட்டெழுத்து உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.பயிற்சி பெறுவோருக்கு, ஒவ்வொரு மாதமும், 500 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள், 27 வயதிற்கு மிகாமலும், பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள், ஜூன், 26 வரை, சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டட வளாக அலுவலகத்தில் வழங்கப்படும்.


விண்ணப்பத்துடன் கல்லுாரி, கல்வி சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு சான்றிதழ், இரண்டு புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன், 26க்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன், 27, 28ம் தேதி, எழுத்து, நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, பயிற்சிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.